Breaking News

தமிழக வெற்றிக்கழக பிரமாண்ட மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக பிரமாண்ட மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன முழு விவரம்

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ளது .மாநாட்டுத் திடலில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

 


தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் யாரும் மேற்கொள்ளாத வகையில் ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

85 ஏக்கர் பரப்பளவிலான மாநாட்டுத் திடலில், பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது 

மாநாட்டுத் திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், தமிழன்னை. சேரன், சோழர், பாண்டிஅ மன்னர்கள் , மற்றும் விஜய் ஆகியோரது பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டின் நுழைவாயிலில் அழகு முத்துக்கோன், வேலு நாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன் என தமிழ் வரலாற்று வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் 101 அடி கொடிக்கம்பத்தில், 20 அடி உயரம் 30 அடி அகலத்தில் பிரமாண்ட கொடி ஏற்றப்பட உள்ளது. கொடிக்கம்ப உச்சியில் இடிதாங்கி பொருத்தப்படுகிறது. இந்த கொடியை ரிமோட் மூலமாக விஜய் ஏற்ற உள்ளார். அடுத்து வரும் 25 வருடங்கள் கொடிக்கம்பம் துரு பிடிக்காமல் இருக்கும் வகையில் வேதியியல் முலாம் பூசப்பட்டுள்ளது.  10 ஆண்டுகள் கம்பம் அங்கேயே இருக்கும் வகையில் நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


  • மாநாட்டுத் திடலைச் சுற்றி மொபைல் டாய்லெட் எனப்படும் 600 நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • அவசர தேவைகளுக்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 20 ஆம்புலன்ஸ்கள் மாநாட்டுத் திடல் அருகே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • மாநாட்டுத் திடலை ஒட்டி உள்ள சாலைகளில் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 
  • தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு வருபவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவரக் கூடாது என பதாகைகள்  வைக்கப்பட்டுள்ளது 
  • மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வரக்கூடாது. 
  • செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, காணொளி, ஃபிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை. 
  • மது அருந்திவிட்டு வரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த மட்டும் 200 ஏக்கர் பரப்பளவில் நான்கு பார்க்கிங் மைதானங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
  • மாநாட்டு அரங்கம், திடல், பார்க்கிங் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும்.
  • ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் கூட உள்ளதால் தகவல் தொடர்பு எளிதாக இருக்க பிரத்யேகமாக ஒரு மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.-
  • மாநாட்டுத் திடலில் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் 2 குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன. திடலைச்சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஆங்காங்கே குடிநீர் டேங்க்குகள் வைக்கப்பட்டுள்ளன.
  • மாநாட்டு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் எளிதாக கண்டுகளிக்க எல்.இ.டி திரைகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன
  • தவெக மாநாட்டிற்கு வருபவர்கள் வருகை பதிவு செய்யவும் 0 பங்கேற்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காகவும் மாநாட்டுத்திடலை சுற்றி ஆயிரக்கணக்கான QR CODE அடங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளது
  • மாநாட்டுத் திடலில் புல் தரைகளில் மேல் கிரீன் மேட் போடப்பட்டுள்ளது மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க தனித்தனி பார்டிஷியன்களாக பிரிக்கப்பட்டு 48 அரங்குகள் அமைக்கப்பட்டு , பொதுமக்கள் அமர 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன
  • மாநாட்டுத் திடலுக்கு வெளியே நின்று நிகழ்ச்சியைக் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • மாநாட்டு பார்க்கிங் திடலில் பஞ்சர் கடை மற்றும் காற்று அடிக்கும் இயந்திரம் மேலும் வாகனம் பழுது பார்க்கும் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .!
  • மாநாட்டுக்கு வருகை தரும் தோழர்களுக்கு பிஸ்கட், மிக்சர், தண்ணீர் பாட்டில் ஆகியவை ஒன்றாக உள்ள கவர் கொடுக்கப்பட உள்ளது 
  • காவல்துறையினரின் வழக்கமான பாதுகாப்போடு தனியார் தன்னார்வலர்களும்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

  • மாநாட்டுத் திடலுக்கு உள்ளே உணவுகள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு அருந்திவிட்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
  • மாநாட்டுக்கு வரும் முக்கிய பிரபலங்கள் பயன்படுத்த கேரவன்கள் மாநாட்டுத் திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback