சென்னையில் மழை வெள்ளத்தில் வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் பிடிக்க உதவி எண் அறிவிப்பு
சென்னையில் மழையின் போது வீட்டிற்குள் வரும் பாம்பு உள்ளிட்டவற்றை பிடிக்க, 044 - 22200335 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் - கிண்டி வனத்துறை அறிவிப்பு
சென்னை மாநகரில் நேற்று முதல் விடாது மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குளாகியுள்ளது.
மழை பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இந்த மழை காலத்தின் போது, வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளை பிடிக்க, 044-2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது
மேலும் பாம்புகளை பிடிக்க 20 பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்