Breaking News

குஜராத்தில் பல வருடங்களாக செயல்பட்ட போலி நீதிமன்றம் நடந்தது என்ன முழு விவரம் fake court

அட்மின் மீடியா
0

குஜராத் பல வருடங்களாக செயல்பட்ட போலி நீதிமன்றம் நடந்தது என்ன கைது செய்யப்பட்ட போலி நீதிபதி முழு விவரம்

குஜராத் காந்திநகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்ற 37 வயது நபர் கடந்த 2019 முதல் தற்போது 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

 


தன்னை ஒரு தீர்ப்பாயத்தின் நீதிபதி போலக் காட்டிக் கொண்டு நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை அவர் சேகரித்து, அந்த சம்பந்தப்பட்ட நபர்களை கிறிஸ்டியன் தன்னை அரசாங்கம் நியமித்த மத்தியஸ்தர் என்று கூறி தொடர்பு கொள்வார்  மேலும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் பிரச்னையை விரைவில் முடித்து விடுவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

பிறகு இரண்டு தரப்பினரை காந்தி நகரில் உள்ள போலி அலுவலகத்திற்க்கு அழைத்து அங்கு விசாரணை போன்று நடத்தி யார் தனக்கு அதிக பணம் தருகிறார்களே அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பையும் வழங்கியுள்ளார்

பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும் வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். அவரிடம் பணம் பெற்ற சாமுவேல் இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்

அதாவது, தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார். ஆனால் அந்த உத்தரவு போலியானது என அகமதாபாத்தில் உள்ள கரஞ்ச் காவல்நிலையத்தில் சிட்டி சிவில் நீதிமன்றத்தின் பதிவாளர் ஹர்திக் சாகர் தேசாய் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், அகமதாபாத் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போலி நீதிமன்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback