Breaking News

அரசை விமர்சிக்கின்றார் என்பதற்க்காக பத்திரிகையாளர் மீது FIR பதிவு செய்யக்கூடாது உச்ச நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

அரசை விமர்சிக்கின்றார் என்பதற்க்காக பத்திரிகையாளர் மீது FIR பதிவு செய்யக்கூடாது உச்ச நீதிமன்றம்

ஒரு பத்திரிகையாளரின் எழுத்துகள், அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருக்கிறது என்று கருதுவதாலேயே அவர் மீது வழக்குப்பதிவுசெய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருக்கிறது. 

பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய் என்பவர், உத்தரப்பிரதேசத்தில் `பொது நிர்வாகத்தில் சாதியின் செயல்பாடுகள்' என்ற செய்தி அறிக்கையை வெளியிட்டதற்காக மாநில அரசு தனக்கெதிராகப் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கில் நீதிபதிகள் ஜனநாயக நாடுகளில், ஒருவர் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரமானது மதிக்கப்படுகிறது. அதேபோல், அரசியல் சாசனத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, ஒரு பத்திரிகையாளரின் எழுத்துகள், அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் கருதுவதால், அவர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படக்கூடாது" என்று தெரிவித்தனர். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback