Breaking News

goa Boat Accident Video That Claimed 78 died கோவாவில் படகு கவிழ்ந்து 78 பேர் பலி என பரவும் வீடியோ உண்மை என்ன

அட்மின் மீடியா
0
Viral Boat Accident Video That Claimed 78 died கோவாவில் படகு கவிழ்ந்து 78 பேர் பலி என பரவும் வீடியோ உண்மை என்ன

பரவும் செய்தி

கோவா விபத்தில் 23 உடல்கள் மீட்கப்பட்ட 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 64 பேர் காணவில்லை.  அதிக சுமை ஏற்றுவதில் படகு உரிமையாளரின் பேராசை, பயணிகளின் அதீத நம்பிக்கை.  மிகவும் சோகம், சோகம். என ஓர் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது

உண்மை என்ன

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கோவாவில் நடந்தது இல்லை

ஆப்ரிக்காவில் 2 நாட்கள் முன்பு நடந்தது.

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் கடலில் ஓர் பெரிய போட் கவிழ்ந்து மூழ்குவதையும், தண்ணீரில் மக்கள் போராடுவதையும் அந்த வீடியோவில் உள்ளது

இணையத்தில் பரவலாக  அந்த சம்பவம் கோவாவில் நடந்தது எனவும் அதிக சுமை ஏற்றப்பட்ட நீராவி கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், இதன் விளைவாக  78 பேர் பலியானார்கள் என ஷேர் செய்கின்றார்கள்

கோவா படகு விபத்து குறித்து கோவா போலீசார் விளக்கம் அளித்துள்ளனர் அதில் கோவா அருகே படகு கவிழ்ந்ததாக பரவி வரும் வீடியோ பொய்யான செய்தி என்று கோவா காவல்துறை தெளிவுபடுத்தியது, 

இது குறித்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் ஆப்பிரிக்காவின் காங்கோவில் நடந்துள்ளது. சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்" என்று   அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்


https://x.com/Goa_Police/status/1842497105295777921?t=D1Tt9nHJ1g9DV5M0-oEpmw&s=19

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback