Breaking News

உங்க ஆண்ட்ராய்டு போன் திருடப்பட்டாலோ.. தொலைந்துபோனால் இனி நோ பிராப்ளம் Google Android Theft protection features

அட்மின் மீடியா
0

உங்க ஆண்ட்ராய்டு போன் திருடப்பட்டாலோ.. தொலைந்துபோனால் இனி நோ பிராப்ளம் Google Android Theft protection features

Google நிறுவனம் அதன் கீழ் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு புதிய அட்டகாச அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது அதாவது கூகுள் நிறுவனம் தற்போது புதிய Android theft protection பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.



எடுத்துக்காட்டாக, உங்கள் சாதனம் திருடப்பட்டு, திருடன் உங்கள் மொபைலைத் திறக்க முயற்சித்தால், அது தானாகவே பூட்டப்படும். எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாடும் சாதனத்தை உங்கள் தரவைப் பூட்ட வழிவகுக்கும். இதனால் திருடர்கள் திருடப்பட்ட சாதனங்களை அணுகுவதில் சிரமம் ஏற்படும். இருப்பினும், தற்போது இந்த அம்சங்கள் அமெரிக்க சந்தைகளில் மட்டுமே கிடைக்கும். அவற்றை விரைவில் இந்தியாவிற்கும் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது .

சிறப்பம்சங்கள்:-

உங்கள் ஸ்மார்ட்போனில் Google Services> All services > Personal & device safety என்ற செட்டிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

தொலைபேசி திருடப்பட்டால் அவற்றைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றது 

இன்டர்நெட் சேவையிலிருந்து உங்கள் போன் திடீரென துண்டிக்கப்பட்டால் இந்த சேவை உடண்டியாக இயக்கப்படும் 

உங்கள் போனில் இன்டர்நெட் சேவை இல்லாவிட்டாலும் திடீரென ஏற்படும் அதிர்வின் மூலம் உங்கள் போன் ஆஃப்லைன் லாக் செய்யப்படும்

எடுத்துக்காட்டாக, திருடன் சாதனத்தை அணைக்க அல்லது விமானப் பயன்முறையில் வைக்க முயற்சித்தால், இந்த அம்சம் உங்கள் சாதனத்தைப் பூட்டிவிடும்.

ரிமோட் லாக் அம்சம்  உங்கள் சாதனத்தை தொலைவிலிருந்து பூட்ட அனுமதிக்கிறது. ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி திருடப்பட்ட உங்கள் சாதனத்தைப் பூட்டலாம். 

Give Us Your Feedback