Breaking News

சுற்றுலா செல்பவர்களுக்கு கொடைக்கானல் ,நீலகிரி செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு How To Apply ePass Online for Ooty & Kodaikanal

அட்மின் மீடியா
0

சுற்றுலா செல்பவர்களுக்கு கொடைக்கானல் ,நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .பூங்கொடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது.எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம். 

மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 0451-2900233, 9442255737 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி - வழிகாட்டு நெறிமுறைகள் என்ன முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/05/e-pass-for-ooty-apply-online-kodaikanal.html

அதேபோல் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்ட மற்றும் மாநில சுற்றுலா பயணிகள் வர இ - பாஸ் நடைமுறை தொடரும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்

அதன்படி மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் 07.05.2024 முதல் இ-பாஸ் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இது நாள் வரை இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறையினை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

எனவே நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி சரிபார்ப்பிற்கு பிறகு நீலகிரிa மாவட்டத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பினை நல்குமாறு அனைத்து பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback