ஈரான் இஸ்ரேல் போர் மூண்டது - இஸ்ரேல் மீது குண்டுமழை பொழிந்த ஈரான் வைரலாகும் வீடியோ Iranian missiles rain down on Israel
ஈரான் இஸ்ரேல் போர் மூண்டது - இஸ்ரேல் மீது குண்டுமழை பொழிந்த ஈரான் வைரலாகும் வீடியோ
காசா மீதான போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்னர்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காஸா, சிரியா, ஏமன் , லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறி உள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாகுதலில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவில் ஜெருசலம் உள்ளிட்ட நகரங்களில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. குறிப்பாக மேற்கு கரைப் பகுதி மற்றும் நெகவ் ஆகிய பகுதிகளில் சைரன்கள் விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
சேத விபரங்கள் பற்றிய எந்த தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை. ஈரான் முதல் முறையாக தற்போது இஸ்ரேல் மீது நேரடியாக ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது.
இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதோடு 3ம் உலகப்போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது
இந்தியா:-
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க இந்திய தூதரகம் உத்தரவு!
பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருக்க வேண்டும் எனவும் இந்திய தூதரகம் வலியுறுத்தல்
அமெரிக்கா:-
ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்
இஸ்ரேல், ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளியை மூடி அந்தந்த நாடுகளின் அரசுகள் உத்தரவு
இஸ்ரேல்:-
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம்!உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் இதுவரை பெறவில்லை இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1841176113437163581
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1841176029622153410
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1841175923909148798
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ