Breaking News

தமிழ்நாடு அரசில் Librarian Cum Caretaker வேலை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசில் Librarian Cum Caretaker வேலை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம். கவர்ணகிரி வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம். கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவியின் பெயர்:-

நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) 

பணியமர்த்தப்படும் இடம்:-

1) வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம் - வல்லநாடு 

2) வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் கவர்ணகிரி

3) வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் கட்டாலங்குளம் 

கல்வித்தகுதி:-

10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate In Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:-

01.07.2024 அன்றுள்ளவாறு 

BC 18 வயது முதல் 34, வயதிற்குள் இருக்க வேண்டும்.

MBC 18 வயது முதல் 34,வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC 18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க:-

விண்ணப்பப் படிவத்தினை www.thoothukudi.nic.in என்ற தூத்துக்குடி மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு பெயர். விலாசம், பிறந்த தேதி. கல்வி. அனுபவ தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் மணிமண்டபத்தின் பெயரை குறிப்பிட்டு, உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், 

தூத்துக்குடி மாவட்டம் 628101 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

18.10.2024 மாலை 5 மணிக்குள்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2024/10/2024100186.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback