Breaking News

ஆட்டோவை முந்தி சென்ற கார் பட்டபகலில் சாலையில் மனைவி , தாய் ,தந்தை முன்பு அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர் வைரலாகும் வீடியோ mumbai mob lynching Man Brutally Beaten To Death In Front Of Family

அட்மின் மீடியா
0

மும்பையில் ஆட்டோவை முந்தி சென்றதற்காக நபர் அடித்துக் கொலை

மும்பையில் சாலையில் முந்தி செல்ல முயன்ற கார்  27 வயதான ஆகாஷ் மைனே, மும்பையின் மலாட் ஈஸ்டில் சில ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்களுடன் சிறு வாக்குவாதத்திற்குப் பிறகு அடித்துக் கொல்லப்பட்டார். mumbai mob lynching Man Brutally Beaten To Death In Front Of Family

அவரது வயதான பெற்றோர்கள் தங்கள் மகனின் உயிரைக் காப்பாற்றுமாறு கைகளைக் கூப்பி கெஞ்சுகிறார்கள் இந்த வீடியோ இனையத்தில் வைரல் ஆகின்றது

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள புஷ்பா பார்க்கில் கடந்த 12-ம் தேதி ஆட்டோ மீது ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் பரிதாபமாக அடித்துக் கொல்லப்பட்டார். 


ஆகாஷ் என்ற வாலிபர் தனது பெற்றோருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது  ஒரு ஆட்டோவை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கார், ஆட்டோ மீது லேசாக இடித்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவருக்கும் ஆகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கினர்.

அதே நேரத்தில் அவரது தந்தையும் தாயும் தலையிட்டு தாக்குபவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார். அதிலும் ஆகாஷின் தாய் தன் மகனைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் அவனது உடலைக் கவசமாக்கியது மனவேதனையை ஏற்படுத்தியது.தன் மகனை அடிக்க வேண்டாம் என தந்தையும் கெஞ்சினார். அப்போதும் ஈவு இரக்கம் காட்டாத அந்த நபர்கள், ஆத்திரம் தீரும் வரை ஆகாஷை கால்களால் மிதித்தனர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர் மற்றும் மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1846390269727363517

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback