Breaking News

பார்ட் டைம் ஜாப், வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என வரும் தகவலை நம்பாதீர்கள் , சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை part time jobs work from home frauds

அட்மின் மீடியா
0

பார்ட் டைம் ஜாப், வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என வரும் தகவலை நம்பாதீர்கள் , பைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை part time jobs work from home frauds



Part Time Job வேலை தருவதாக கூறி பலர் ஏமாந்துள்ளார்கள் எனவே அது போல் வரும் தகவலை நம்பாதீர்கள் உதாரணமாக பிரபலமான டிராவல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக, அந்த நிறுவனத்துக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் தருவதாக கூறுவார்கள்

குறிப்பாக, வீட்டிலிருந்தே வேலை, பகுதி நேர வேலை, ஆன்லைன் வேலை என ஆசை காட்டி மோசடி செய்கின்றனர்.

அப்படிப்பட்ட லிங்க்குகளையும் விளம்பரங்களையும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர். அப்படிப்பட்ட லிங்க்குகளில் யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவற்றை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீஸார் அறிவுறித்தியுள்ளனா். 

மேலும் தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும், இதுபோன்ற சைபர் குற்ற புகாா்களுக்கு 1930 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback