Breaking News

சவூதி அரேபியாவில் திருக்குர்ஆன் வசனங்களை பாப் இசையுடன் பாடினார்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன Quran pop music fake news

அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் திருக்குர்ஆன் வசனங்களை இசையுடன் பாடினார்கள் என பரவும் வீடியோ  உண்மை என்ன



பரவிய செய்தி

சவூதி அரேபியாவில் குர்ஆன் சூராவை இசையுடன் பாப் டான்ஸ் அஸ்தஃபிருல்லாஹ்...
இறைவனின் சாபம் இறங்கும் நாள் நெருங்கி விட்டது என ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்...


உண்மை என்ன:-

அட்மின் மீடியா உண்மை சரிபார்ப்பு குழு இந்த செய்தியை சரிபார்த்து, அதில் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது என்று கண்டறிந்தது, 

மேலும் பலரும் ஷேர் செய்து வரும் அந்த வீடியோ  எடிட்டிங் செய்யப்பட்டது, 

மேலும் இந்த இசை நிகழ்ச்சி அரபு நாடுகளில் நடைபெற வில்லை என்பதையும் கண்டறிந்தது.

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில்  நடைபெற்ற ஸ்லிப்நாட் இசை நிகழ்ச்சி ஆகும்.

அந்த வீடியோவில் யாரோ ஆடியோ எடிட் செய்து புனிதமான அல் குரான் சூராவை சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்

கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் நடைபெற்ற KNOTFEST USA 2014 விழாவில் ஸ்லிப்நாட் கச்சேரியில் பாடல் ஆகும்

 அந்த வீடியோவை  இசைக்குழு அவர்களுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில்  வெளியிட்டுள்ளது.

ஸ்லிப்நாட் என்பது ஒரு அமெரிக்க மெட்டல் இசைக்குழு ஆகும், இது 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க மாநிலமான அயோவாவில் நிறுவப்பட்டது.

அட்மின் மீடியா ஆதாரம் & அசல் பாடலை கேட்க இங்கு கிளிக் செய்யவும்..

https://youtu.be/8Dic5RWvuOM.

சவூதி அரேபியாவில் திருக்குர்ஆன் வசனங்களை பாப் இசையுடன் பாடினார்கள் என பரவும் வீடியோ  உண்மை என்ன Quran pop music fake news

https://www.adminmedia.in/2024/10/quran-pop-music-fake-news.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி

Give Us Your Feedback