இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் ratan tata passed away
அட்மின் மீடியா
0
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் ratan tata passed away
இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா இவருக்கு வயது 86. இந்நிலையில் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
டாடா குழுமத் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் பிறந்தவர் 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேர் கஷ்டப்பட்டுப் போவதைப் பார்த்து குறைந்த விலையில் கார் தயாரிக்க வேண்டும் என்று உலகிலேயே ரூ.1 லட்சத்துக்கு டாடா நானோ கார் விற்பனை செய்து வந்தார்
கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். வாகனம், ஐ.டி, இரும்பு, தொழில்துறை என பலற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க ரத்தன் டாடா பங்காற்றினார். தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன், விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்