Breaking News

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலியாக SBI வங்கி தொடங்கிய மோசடியாளர்கள்! நடந்தது என்ன முழு விவரம் Fake SBI branch busted in Tamil Nadu

அட்மின் மீடியா
0

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சக்தி மாவட்டத்தின் சாபோரா என்ற ஊரில் போலியான எஸ்பிஐ வங்கியை தொடங்கி மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. Fake SBI Branch Comes Up In Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சாபோரா என்ற கிராமத்தில், எஸ்பிஐ பெயரில் போலியான கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

 


சுமார் 10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த வங்கியில் ஆறு பேர் பணியில் இணைந்துள்ளனர், மேலும் இந்த வங்கியில் கிராம மக்கள், கணக்கு துவங்கவும், பரிவர்த்தனை செய்தும் உள்ளனர். The employees who were hired in SBI Fake Branch had offer letters that looked like the real ones. Interestingly, they did not even know that they were working in a fake bank branch.

இந்த வங்கி துவங்கும் முன்பு வங்கிக்கு மேலாளர்கள், மார்க்கெட்டிங் அதிகாரிகள், காசாளர்கள், கணினி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் இருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். 

அதனை நம்பிய அப்பகுதி இளைஞர்கள் சிலர் 2 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் பணத்தை லஞ்சமாகக் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் அருகில் உள்ள டப்ரா எஸ்பிஐ கிளையின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரனையில் சாபோராவில் உள்ள எஸ்பிஐ கிளை போலியானது எனவும் அங்கு பணியாற்றியவர்களின் நியமனங்களும் போலியானது எனவும் தெரியவந்தது. இதனை அடுத்து இந்த மோசடி சம்பவத்தில் அந்த போலி வங்கியின் மேலாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. 7,000 ரூபாய் மாத வாடகையில் இந்த போலி வங்கிக்கு காவல்துறையினர்  சீல் வைத்தனர்.

A fake branch of the State Bank of India SBI has been unearthed in Chapora village in Sakti district. Six individuals had been duped into working under the pretense of being officially employed by the bank.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback