Breaking News

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் பலர் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளனர் Tamilar Orunginaippu iyakkam

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் பலர் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளனர் Tamilar Orunginaippu iyakkam

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மாநில ஒருங்கினைப்பாளர்கள் திரு.வெற்றிக்குமரன், அதியமான், புகழேந்தி, மாறன், தனசேகரன், திருச்சி பிரபு, மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் இன்று தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பை அறிவித்துள்ளனர்..



தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது வெற்றிக்குமரன் நிருபர்களிடம்:-

நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம். பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம்.

சீமானை நம்பி எண்ணற்ற தமிழர்கள் பொருளாதாரம், குடும்பத்தை இழந்து தவிப்பதாக கூறியுள்ளார். கட்சி வளர தொடங்கும் பொழுது இது நமது கட்சி என்றார். கட்சி வளர்ந்த பிறகு இது என்னுடைய கட்சி என்கின்றார். 

சீமானால் தமிழ்தேசியத்தை வெல்ல வைக்க முடியாது. அதற்கான வேலைகளையும் சீமான் செய்யவில்லை.

2010 ல் தேர்தல் அரசியலில் ஆரம்பித்த கட்சி 15 வருடத்தில் 20 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் 8 சதவீதத்தை பெற்றுள்ளது. 

தலைமை சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. தான் சொல்லும் அனைத்தையும் ஆம் என்று நம்ப கூடியவர்களைத்தான் சீமான் தன்னுடன் வைத்துள்ளார். 


நாம் தமிழர் கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் இருக்கிறோம். நாம் தமிழர் கட்சியில் நாங்கள் சேரவில்லை, நாங்கள் தான் உருவாக்கினோம்.

நாம் தமிழர் கட்சியில் வளர்ந்து வருபவர்களை சீமான் அனுமதிப்பதில்லை. அவர்களை அடக்கி வைக்கவே விரும்புகிறார். நாம் தமிழர் கட்சியை வெளியில் இருந்து பார்த்தால் பெரிய அளவிலான கட்சியாக தெரியும், ஆனால் உள்ளே இருந்து பார்த்தால்தான் தெரியும் அது ஒன்றுமில்லாத கட்சி.

நாம் தமிழர் கட்சியில் சீமானால் புறக்கணிக்கப்பட்ட அவரது தலைமை பிடிக்காமல் வெளியே வந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து செயல்பட உள்ளோம். 

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்கிற பெயரில் இயக்கத்தை தொடங்கி உள்ளோம். 

முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம், மேலும் இந்த இயக்கத்தில் சேர ஓர் இணையதளமும் https://www.tamizharorunkinaippuiyakkam.com/ தொடங்கப்பட்டுள்ளது என கூறினார் 

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback