தமிழகத்தில் மழை எங்கெல்லாம் பெய்யும் Tamilnadu Alert என்ற மொபைல் ஆப் அறிமுகம் முழு விவரம்
தமிழகத்தில் மழை எங்கெல்லாம் பெய்யும் Tamilnadu Alert என்ற மொபைல் ஆப் அறிமுகம் முழு விவரம்
ஆண்ட்ராய்டு அலைபேசி மூலம் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக அதிகாரபூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும். அவற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் தமிழக அரசு TN-Alert App என்னும் செயலியை Google Play Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் TN-Alert App-ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம்
பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும் முன்னெச்சரிக்கை செய்திகளை பெறவும் தமிழக அரசு TN-Alert App-ஐ உருவாக்கியுள்ளது.
இதனை Play Store-ல் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வானிலை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் துல்லியமாக வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தற்போதைய வானிலை தகவல், வானிலை முன்னறிவிப்பு, மழை, இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கை, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான வானிலை அறிக்கை, அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு.
பெறப்பட்ட மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கப்படக்கூடும் எனக் கருதப்படுகிற வசிப்பிடப் பகுதிகள் குறித்த விபரங்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கான தகவல்கள் மேலும் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை பதிவு செய்வதற்கான வசதிகள் உள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் மிகவும் பயனுள்ள TN Alert App ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
Tags: தமிழக செய்திகள்