Breaking News

துபாய் பாலைவனத்தில் உபெர் ஒட்டக சவாரி என பரவும் வைரல் வீடியோ uber camel

அட்மின் மீடியா
0

துபாய் பாலைவனத்தில் உபெர் ஒட்டக சவாரி என பரவும் வைரல் வீடியோ 

தற்போது இணையத்தில் பரவும் வீடியோவில் இரு பெண்கள் துபாய் - ஹட்டா சாலையிள் Al Badayer அருகே சிக்கித் நின்றுள்ளனர்.உதவிக்காக மீட்பு குழுவினர் தொடர்பு கொள்ள முயற்சித்த அவர்கள், உபெர் செயலியை திறந்துள்ளனர்.ஆச்சரியம் ஏற்படுத்திய “உபெர் ஒட்டக ஓட்டி”அதில் அவர்களுக்கு ATV-கள் மற்றும் அவர்களுக்கு ஆச்சரியம் வழங்கும் விதமாக ஓட்டக சவாரி போன்ற தனித்துவமான போக்குவரத்து விருப்பங்கள் காண்பித்துள்ளது.

இதனை கண்டு உற்சாகமடைந்து அந்த பெண் வீடியோவில், "நாங்கள் தொலைந்து போய் பின்னர் உதவிக்காக உபெரை சரிபார்க்க முடிவு செய்தோம், மற்றும் அங்கு என்ன தெரியுமா? அதில் ஒரு ஒட்டகம் இருக்கிறது!" என்று கூறினார்.அத்துடன் அந்த வசதியை அவர்கள் தேர்வு செய்யவே ஒரு மனிதர் விரைவில் ஒரு ஒட்டகத்துடன் வந்து, தன்னை “உபெர் ஒட்டக ஓட்டி"(Uber Camel Rider) என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.அவர் பெயர் தீபக் என்றும் பாலைவனத்தில் தவிக்கும் பயணிகளுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்றவர் என்று விளக்கியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இதன் நம்பகத்தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.உபெர் ஒட்டகச் சவாரிக்கு முன்பதிவு செய்யும் வீடியோ, அந்த எபிசோட் ஒன்றும் போலியாக சித்தரிக்கப்பட்டது ஆகும் என பல இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1849293416238297404

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback