ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரையும் படுகொலை செய்தது இஸ்ரேல்! காசாவில் நடத்திய ராணுவத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் Yahya Sinwar உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரையும் படுகொலை செய்தது இஸ்ரேல்! காசாவில் நடத்திய ராணுவத் தாக்குதலில் சிக்கி ஹமாஸ் தலைவர் Yahya Sinwar உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 'ஹமாஸ்' அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.இஸ்ரேலின் காசா பகுதி மற்றும் மேற்கு கரை ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்து கேட்டு, பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர்.
இவர்களுடன் ஹமாஸ் அமைப்பும் ஆதரவு அளித்து வருகிறது.இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் கொல்லப்பட்டார்.ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து தற்போது புதிய தலைவராக யாஹ்யா சின்வார் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அக்.,17) ஐ.டி.எப். எனப்படும் இஸ்ரேல் ராணுவப்படையினர் காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் யாஹ்யா சின்வார் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்