மகாராஷ்டிராவில் 100 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றிக்கு உதவிய ஒவைசி என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம் aimim maharashtra result fake news
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றிக்கு உதவிய ஒவைசி என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம் What is the truth of the news that Owaisi helped the BJP alliance win in Maharashtra?
மகாராஷ்டிராவில் மொத்தம் 145 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 133 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. aimim maharashtra result fake news
பரவிய செய்தி:-
உண்மை என்ன:-
கடந்த 2019 தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த சிவசேனா கட்சி 56 தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால், முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம்பிடித்ததால் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. அடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் பதவியை ஏற்றார் உத்தவ் தாக்கரே . ஆனால் சில ஆண்டுகளில் அந்த கட்சியில் இருந்து ஷிண்டே தலைமையிலான ஆதரவாளர்கள் விலகி பாஜக ஆதரவுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம், நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் இன்று (நவம்பர் 20) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா மாநிலத்தில் 62% வாக்குகள் பதிவானது
பெரும்பான்மை:-
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
கூட்டணி:-
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது.
பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
முடிவு:-
இதில் பாஜக மட்டுமே தனியாக 132 தொகுதியில் வென்று இருக்கிறது. சிவசேனா (ஷிண்டே) 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 41 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அசாதுதீன் ஓவைசி
இந்த 2 கூட்டணிகள் மட்டுமல்லாது, பகுஜன் சமாஜ் கட்சி 237 வேட்பாளர்களையும், அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சி 16 வேட்பாளர்களையும் நிறுத்தி தனித்து போட்டியிட்டன.
2024 மகாராஷ்டிரா விதானசபா தேர்தலில் மாலேகான் சென்ட்ரலில் வெற்றி பெற்ற முப்தி முகமது இஸ்மாயில் அப்துல் காலிக்கிற்கு அகில இந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி வாழ்த்து தெரிவித்தார்.அதில்
மலேகான் எம்எல்ஏவாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஃப்தி இஸ்மாயில் சாஹாப்பிற்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு அதிக அளவில் வாக்களித்த மகாராஷ்டிர மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம், உங்கள் அனைவரையும் மனம் தளராமல், புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் கடினமாக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் எழுதினார்.
மக்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், மகாராஷ்டிரா அரசியலில் AIMIM தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அசாதுதீன் கூறினார்.
மேலும் பரூக் ஷப்தி மற்றும் ஃபரூக் ஷா அன்வர் மற்றும் அதீக் அஹ்மத் ஆகியோரையும் அசாதுதீன் குறிப்பிட்டார், அவர்கள் தங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தனர், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. "இன்ஷா அல்லாஹ் அவர்களின் விடாமுயற்சி அவர்களின் எதிர்காலத்தில் பலனளிக்கும்" என்று அவர் கூறினார்
ஒவைசி பெற்ற வாக்குகள்:-
AIMIM 16 Candidates list Won Mufti Ismail Qasmi (Malegaon Central) 109332 (+75)
2) Rasees Lashkaria வேட்பாளர் (Versova) தொகுதியில் பெற்ற வாக்குகள் 2937 தோல்வி வாக்கு வித்தியாசம் (-62459)
3) Faiyaz Ahmed Khan வேட்பாளர் (Bycalla) தொகுதியில் பெற்ற வாக்குகள் 5531 தோல்வி வாக்கு வித்தியாசம் (-74602)
4) Waris Pathan வேட்பாளர் (Bhiwandi Wast) தொகுதியில் பெற்ற வாக்குகள்15800 தோல்வி வாக்கு வித்தியாசம் (-54372)
5) Naser Siddiqui வேட்பாளர் (Aurangabad Central) தொகுதியில் பெற்ற வாக்குகள்77340 தோல்வி வாக்கு வித்தியாசம் (-8119)
6) Faruq Shabdi வேட்பாளர் (Solapur Central) தொகுதியில் பெற்ற வாக்குகள் 60790 தோல்வி வாக்கு வித்தியாசம் (-48405)
7) Faruk Shah Anwar வேட்பாளர் (Dhule) தொகுதியில் பெற்ற வாக்குகள் 70788 தோல்வி வாக்கு வித்தியாசம் (-45750)
8) Ateeque Ahmad Khan வேட்பாளர் (Mankhurd Shivaji Nagar) தொகுதியில் பெற்ற வாக்குகள் 42027 தோல்வி வாக்கு வித்தியாசம் (-12753)
9) Syed Moin வேட்பாளர் (Nanded South) தொகுதியில் பெற்ற வாக்குகள் 14634 தோல்வி வாக்கு வித்தியாசம் (-28634)
10) Saif Pathan வேட்பாளர் (Mumbra-Kalwa) தொகுதியில் பெற்ற வாக்குகள் 13519 தோல்வி வாக்கு வித்தியாசம் (-143622)
11) Yusuf Punjani வேட்பாளர் (Karnja) தொகுதியில் பெற்ற வாக்குகள் 29867 தோல்வி வாக்கு வித்தியாசம் (-44063)
12) Asma Shaikh வேட்பாளர் (Kurla) தொகுதியில் பெற்ற வாக்குகள் 3945 தோல்வி வாக்கு வித்தியாசம் (-68818)
13) Kreeti Dongre வேட்பாளர் (Nagpur North)தொகுதியில் பெற்ற வாக்குகள் 3186 (-99704)
14) Mahesh Kamble வேட்பாளர் (Miraj) தொகுதியில் பெற்ற வாக்குகள் 2599 தோல்வி வாக்கு வித்தியாசம் (-127167)
15) Samrat Surwade வேட்பாளர் (Murtizapur) தொகுதியில் பெற்ற வாக்குகள் 3201 தோல்வி வாக்கு வித்தியாசம் (-88619)
Tags: FACT CHECK அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்