Breaking News

2000 கோடி ரூபாய் லஞ்சப்புகாரில் அதானிக்கு பிடிவாரண்ட் - அமெரிக்க நீதிமன்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

2000 கோடி ரூபாய் லஞ்சப்புகாரில் அதானிக்கு பிடிவாரண்ட் அளித்த அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்தது! Indian billionaire Gautam Adani charged in US for alleged bribery, fraud

அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி 62 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

அதானி குழுமம் இந்தியாவில் மாபெரும் சோலார் திட்டத்தை வாங்க இந்திய அரசு ஊழியர்களுக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், இதை வைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் 3 பில்லியன் டாலர் கடன் பெற்று, இந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 


இந்த வழக்கில், கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிஸா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் வியாழக்கிழமை காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதும் அதானி குழும பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. ஆசிய அளவிலும் அந்த நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கவில்லை"-அதானி குழுமம் மறுப்புசூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்கு சாதகமாக லஞ்சம் கொடுக்கவில்லை என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியதால் அதானி உடனான ரூ.5,900 கோடி மதிப்பிலான 2 திட்டங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் ரூடோ அறிவிப்பு கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ளவிருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback