அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை Us Presidential results 2024
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார்.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.
எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் ஒருவர் எத்தனை கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகளை ஒருவர் எந்த அளவுக்கு கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.இதைதொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது
வெல்லப்போவது டிரம்பா..? கமலா ஹாரிஸா? என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.
தற்போதைய நிலவரப்படி :- காலை 10.00
டொனால்ட் ட்ரம்ப் 230 இடங்களில் முன்னிலை
கமலா ஹாரிஸ் 187 இடங்களில் முன்னிலை
Tags: FACT CHECK வெளிநாட்டு செய்திகள்