Breaking News

2025-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்தது தமிழ்நாடு அரசு Tamil Nadu Public Holidays 2025

அட்மின் மீடியா
0

 மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26-ஆம் எண் அறிவிக்கையின்படி 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் விளக்கம்" என்பதன் கீழ். பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும். 2025-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.


2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் 3 விடுமுறை நாள்கள் ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகள், நாள்களை பொது விடுமுறை நாள்களாக அறிவித்து தமிழக அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலில் 24 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி மாதம்:-

ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை 

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, 

ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 

ஜனவரி 16ம் தேதி உழவர் திருநாள், 

ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினம், 

பிப்ரவரி  மாதம்:-

பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம், 

மார்ச்  மாதம்:-

மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, 

மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை, 

ஏப்ரல் மாதம்:-

ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு, 

ஏப்ரல் 10-ம் தேதி மகாவீர் ஜெயந்தி, 

ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு, 

ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி, 

மே மாதம்:-

மே 1ம் தேதி மே தினம் 

ஜூன்  மாதம்:-

ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகை,

ஜூலை மாதம்:-

ஜூலை 6-ம் தேதி மொகரம் பண்டிகை, 

ஆகஸ்ட்  மாதம்:-

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம், 

ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 

ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி, 

செப்டம்பர்  மாதம்:-

செப்டம்பர் 5ம் தேதி மிலாது நபி, 

அக்டோபர் மாதம்:-

அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை, 

அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி, 

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, 

அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை, 

டிசம்பர் மாதம்:-

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை என மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback