Breaking News

இந்தியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம்! முழு விவரம் First in India 24x7 Online Court

அட்மின் மீடியா
0
இந்தியாவிலேயே முதன்முறையாக... 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம் கேரள மாநிலம் கொல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது



நவம்பர் 20ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்க்கு வந்துள்ள இந்த  நீதிமன்றத்தில் 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்.இதன் மூலம் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தபடியே மனுக்களை தாக்கல் செய்யவும், வழக்குகள், சம்மன்களின் நிலை குறித்து அறியவும், வாய்தாக்களுக்கு முறையிடவும் முடியும். வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞர்கள் காணொலி வாயிலாக ஆஜராகி வாதங்களையும் முன்வைக்கலாம்.

இரு மாதங்களுக்கு முன்பு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்தப் புதிய மின்னிலக்க நீதிமன்றத்தைத் திறந்து வைத்தார். வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும் விரைவான சட்ட தீர்வுகளை வழங்கவும் இந்த டிஜிட்டல் நீதிமன்றம் பேருதவியாக இருக்கும் எனக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றத்தில் நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும், உலகில் எங்கிருந்தும் வழக்குகளை பதிவு செய்யலாம்.இந்த நீதிமன்றத்தில், மனுதாரர் விரும்பினால் நேரில் ஆஜராகலாம். இல்லையென்றால் அனைத்து நடைமுறைகளும் ஆன்லைனிலேயே விரைவில் முடிந்து விடும். மேலும் இந்த நீதிமன்றம் முற்றிலும் காகிதமற்றது மற்ற நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் செய்யப்பட்டாலும், அதன் பேப்பர் பைல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் அது இங்கே தேவைப்படாது.

குற்றவாளிகளுக்கான சம்மன்கள் டிஜிட்டல் முறையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படும். 

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு உத்திரவாத கையெழுத்திட்ட நபர்கள் தங்களின் ஜாமீன் மனுக்களையும் ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback