Breaking News

தமிழகத்தில் நவ.26, 27 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நவ.26, 27 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம்.
 
12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
 
வங்கக்கடலில் இன்று உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறு எனவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளள்ளனர்.
 
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
 
கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
 
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21.11.2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
 
நவம்பர் மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
நவ.25 முதல் பருவமழை வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback