Breaking News

29 ம் தேதி 6 மாவட்டங்கள் 30 ம் தேதி 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் முழு விவரம்

அட்மின் மீடியா
0

29 ம் தேதி 6 மாவட்டங்கள் 30 ம் தேதி 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் முழு விவரம்

 


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, நவ. 30 ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நாளை 29 ம்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள் 30 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று(நவ.28) இரவு வரை மிதமான மழை பெய்யும், இந்த கணிப்பில் என்ற மாற்றமும் இல்லை. நவம்பர் 29, 30 தேதிகளில் சென்னை, கடலூர், விழுப்புரம், கடலோரப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback