Breaking News

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய நபர் கைது - நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து நபர் கைது நடந்தது என்ன முழு விவரம் 



சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து. தப்பி ஓட முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒரு மாதமாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என விக்னேஷ் குற்றம்சாட்டி மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, விக்னேஷ் உட்பட 4 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback