ராகுல்காந்தி குடியுரிமை குறித்து 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உள்துறை அமைச்சகத்திற்க்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு Rahul Gandhi's citizenship
ராகுல்காந்தியின் குடியுரிமை விவகாரம் குறித்து 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உள்துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
ராகுல் காந்திக்கு குடியுரிமை வழங்குவது குறித்து டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும், இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 19ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி குடியுரிமை பற்றி பதில் அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.மசூதி மற்றும் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்