திருச்செந்தூர் அருகே மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் கைது
திருச்செந்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் அத்துமீறிய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் ,பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி செயலாளர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் சென்றவர், மறுநாள் போட்டி நடைபெறும் என்பதால் அங்கு உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மாணவிகளை மது அருந்து சொல்லி மதுவைக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் பொன்சிங் மாணவிகளிடம் முறை தவறி நடந்து கொண்டதுடன், பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று மதியம் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரணை விசாரணை மேற்கொண்டார். மேலும் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவையில் பதுங்கி இருந்த உடற் கல்வி ஆசிரியரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனியார் பள்ளி முதல்வர் சார்லஸ் சுவீட்லி மற்றும் பள்ளியின் செயலர் செய்யது அகமது ஆகியோரை குலசேகரபட்டினம் காவல்துறையினர் கைது செய்து, திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது திடீரென பள்ளிச் செயலர் செய்யது அகமது தனக்கு நெஞ்சுவலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்