பொதுமக்களின் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்கிட வேண்டும் - தலைமை செயலர் உத்தரவு
பொதுமக்களின் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்கிட வேண்டும்
அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வும் காணப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு
அரசு அலுவலகங்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் புகார் மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். கோரிக்கை ஏற்பது சாத்தியமில்லை என கண்டறிந்தால், சம்பந்தப்பட்டவருக்கு 1 மாதத்துக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிப்பு
தலைமை செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் அரசு அலுவலகங்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் குறைதீர் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்க வேண்டும்.
மக்களிடம் இருந்து புகார் கிடைத்ததில் இருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்ய வேண்டும்.
புகார் மனுக்களின் மீதான முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு தெரிவிப்பது அவசியம்.
மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டால் அதுகுறித்து மக்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
கோரிக்கை சாத்தியமில்லை என கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்கப்படலாம்.
அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள், ஆட்சியர்கள் கவனமாக பின்பற்றி மாதந்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும். என தலைமை செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு