Breaking News

பல்லடம் அருகே தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேர் வெட்டி கொலை நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பல்லடம் அருகே தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேர் கொலை நடந்தது என்ன முழு விவரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலுப்பூர் அம்மன் கோவில் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி , அலமேலு ஆகிய மூன்று பேரை கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். 

இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டுக்கு வந்த சலவை தொழிலாளி ஒருவர், 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவிநாசி பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நகை பணத்திற்காக இந்த கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback