டயட் உணவு மூலம் 40 நாட்களில் குணமான புற்றுநோய் என நவ்ஜோத் சிங் சித்து வெளியிட்ட சர்ச்சை வீடியோ
டயட் உணவு மூலம் 40 நாட்களில் குணமான புற்றுநோய் என நவ்ஜோத் சிங் சித்து வெளியிட்ட சர்ச்சை வீடியோ
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து 4ம் நிலை மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் தற்போது அவர் புற்றுநோயில் இருந்து முழுவதுமாக குணமாகி விட்டதாக அறிவித்தார். மேலும் தனது மனைவி எலுமிச்சை சாறு, பச்சை மஞ்சள், ஆப்பிள் சீடர் வினிகர், வேப்ப இலைகள், துளசி மற்றும் குயினோவா போன்ற உணவைப் பின்பற்றியதாகக் தெரிவித்துள்ளார் இந்த உணவு முறையால் புற்றுநோயிலிருந்து 40 நாட்களில் மீண்டு வர உதவியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நான்கு பக்கங்களை கொண்ட 23-டயட் விவரங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
சித்து வெளியிட்டுள்ள வீடியோ குறித்தும் டயட் முறை குறித்தும் பிரபல Tata Memorial Hospital Alumni வெளிட்யிட்டுள்ள அறிவிப்பில்:-
எலுமிச்சை சாறு, வேம்பு, மஞ்சள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற உணவுகளால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் ஆனால் புற்றுநோயை குணப்படுத்தும், என்பதை நிரூபிக்க அறிவியல் சான்றுகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சைக்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைக்கு மாற்றாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
A video of a former cricketer describing his wife's treatment for her breast cancer has been circulating widely on social media. Parts of the video imply that "starving the cancer by not eating dairy products and sugar", consuming haldi (turmeric) and neem helped cure her "incurable" cancer. These statements have no high quality evidence to support them.
While research is ongoing for some of these products, there is no clinical data currently to recommend their use as anti-cancer agents. We urge the public to not delay their treatment by following unproven remedies, but rather to consult a doctor, preferably a cancer specialist, if they have any symptoms of cancer. Cancer is curable if detected early and proven treatments for cancer include surgery, radiation therapy and chemotherapy. Issued in public interest
சித்து வெளியிட்டுள்ள வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/cspramesh/status/1860244173481218453/photo/1
Tags: FACT CHECK இந்திய செய்திகள் வைரல் வீடியோ