Breaking News

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்தஅவகாசம் -தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்தஅவகாசம் -தமிழக அரசு அறிவிப்பு



பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த, டிசம்பர் 10ஆம் தேதி வரை கால நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் அறிவிப்பு 

தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை. காஞ்சிபுரம். திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

                      

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு. 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback