தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு - நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு. அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரில் வழக்குப்பதிவு
சென்னையில் பிராமணர்களுக்கு எதிரான அவதூறுகளை கண்டித்து அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி,
300 ஆண்டுகளுக்கு முன் மன்னர் காலத்தில் அந்தபுரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள். அவர்கள் இன்று தமிழர்கள் என்று சொல்லி கொள்கிறார்கள்” என பேசினார்
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைவர் பேராசிரியர் சி.எம்.கே ரெட்டி மற்றும் பொதுச் செயலாளர் நாயக்கர் நந்தகோபால் ஆகியோர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்
அதில் கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்