தமிழ்நாட்டில் கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் என பரவும் செய்தி உண்மை என்ன
தமிழ்நாட்டில் கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் என பரவும் செய்தி உண்மை என்ன
பரவிய செய்தி:-
தமிழ்நாட்டில் கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாகக் குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியாகவுள்ளது" என்று ஒரு நாளிதழின் புகைப்படம் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம்
கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம்
சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம் விருத்தாசலம் மாவட்டத்தில், விருத்தாசலம். ஸ்ரீமுஷ்ணம். திட்டக்குடி. வேப்பூர் | தாலுக்காக்கள் அமையும்
செய்யாறு மாவட்டத்தில். ஜமுனாமரத்தூர். போளூர், செய்யாறு, வெண்பாக்கம், வந்தவாசி தாலுக்காக்கள் அமையும்.
பொள்ளாச்சி மாவட்டத்தில். கிணத்து கடவு. பொள்ளாச்சி, ஆனை மலை, வால்பாறை, உடுமலை, மடத்துகுளம் தாலுக் காக்கள் இருக்கும் கும்ப கோணம் மாவட் டத்தில் கும்பகோணம், பாபநாசம் திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள் அமையும்.
திருவண்ணாமலை, காரைக்குடி புதுக்கோட்டை. பொள்ளாச்சி, நாமக்கல், கோவில்பட்டி நகராட்சிகள்.மாநகராட்சிகளாக தரம் உயரும்.
பெருந்துறை. சென்னிமலை, அவினாசி. அரூர். பரமத்தி வேலூர், ஊத்தங்கரை. செங்கம். போளூர். செஞ்சி காட்டுமன்னார்குடி. தருவையாறு. ஒரத்தநாடு. பேராவூரணி, பொன்னமராவதி. தம்மம்பட்டி, அந்தியூர், சங்ககிரி, வத்தலகுண்டு. ஆண்டிப்பட்டி ஜக்கம் பட்டி, உத்தமபாளையம். வேடசந்தூர் முது குளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும்.
படப்பை, ஆண்டிமடம், திருமானூர். வேப்பந் தட்டை, தியாகதுருகம். வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சி களாக தரம் உயரும். இதன் மூலம் தமிழகத்தில் மாவட் டங்கள் எண்ணிக்கை 43 ஆக உயரும்.
உண்மை என்ன:-
இது முற்றிலும் பொய்யான தகவல். இந்தப் புகைப்படம் பல மாதங்களாகப் பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://x.com/tn_factcheck/status/1859187517461045266
Tags: FACT CHECK மறுப்பு செய்தி