கலப்பு திருமண உதவி தொகை 50 ஆயிரம், 8 கிராம் தங்கம் பெற விண்ணப்பிப்பது எப்படி முமு விவரம் how to apply for inter caste marriage scheme
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு உதவவும், அவர்களின் மகள்களை சரியான வயது வரை படிக்க ஊக்குவிக்கவும், அரசால் திருமண உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் , கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. how to apply for inter caste marriage scheme
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமணம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தகுதிகள்:-
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
மேலும், 18 வயது நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று போதிய ஆவணங்களான கல்யாண பத்திரிகை, மணமகன் மற்றும் மணமகளின் சாதி சான்றிதழ், மணமகளின் வயது வரம்பு குறித்த விவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
திட்டம் 1:-
இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிதியுதவில், ரூ.15,000 மின்னணு மூலமாகவும், ரூ10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2:-
பட்டம்/பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது.
வருமான உச்சவரம்பு மற்றும் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
கலப்பு திருமணத்தின் வகைகள் வகை: –
I : கலப்பு திருமண தம்பதிகளின் துணைவர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும் அதே சமயம் மற்ற ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வகை –
II: வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாகவும், மற்ற ஒருவர் பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி