Breaking News

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது ,வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - 67% மட்டுமே நிரம்பியுள்ளது. தமிழக அரசு

அட்மின் மீடியா
0

செம்பரம்பாக்கம் தொடர்பான வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - 67% மட்டுமே நிரம்பியுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்து குறிப்பில்:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்கள் குறித்து நீர்வளத்துறையினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் காரணமாக, இன்று (30.11.2024) காலை முதல் பெய்து வரும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில் தற்பொழுது மாலை 4 மணி நிலவரப்படி 19.31 அடி உயரம் நிரம்பி, அதன் முழு கொள்ளளவான 3645 Meft-ல் தற்பொழுது 67% ஆன 2436 Mcft நிரம்பியுள்ளது. 

தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும், 5 நீர்த்தேக்கங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்த கொள்ளளவான 11.76 டிஎம்சி-இல் தற்போது வரை சுமார் 50% கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback