சாலையை கவனிக்காமல் சென்ற 7 வயது சிறுவன் பைக் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம்..சிசிடிவி வீடியோ
சாலையை கவனிக்காமல் சென்ற 7 வயது சிறுவன் பைக் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம்..சிசிடிவி வீடியோ
மங்களூரு எல்லையான மஞ்சேஷ்வர் பகுதியில் உள்ள பாலியூரில் சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 7 வயது சிறுவன் பலத்த காயம் அடைந்தான். இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உடனடியாக சிறுவனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருபக்கமும் கவனிக்காமல் சாலையை கடந்த 7 வயது சிறுவன். வேகமாக வந்த பைக் மோதி, தூக்கி வீசப்பட்டு படுகாயம்.
வீட்டின் கேட்டை திறந்துக்கொண்டு சிறுவர்கள், ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.அந்த கூட்டத்தில், ஒரு சிறுவன், ரோட்டை கடக்க வேகமாக ஓடுகிறான். அப்போது சாலையில் வேகமாக வந்த ஒரு பைக் அக்குழந்தையை தூக்கி வீசியடித்து விட்டு செல்கிறது. சிறுவன் தூக்கி அடிக்கப்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அக்குழந்தையை தூக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், பைக்கில் இடித்து விட்டு சென்ற நபர் யார் என்பது குறித்தும் போலீஸார் தேடி வருகின்றனர்.
A 7-year-old child was seriously injured when he was hit by a speeding motorcycle while crossing the road in Baliyur, Manjeshwar area bordering Mangaluru, Karnataka. The incident was captured on CCTV.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/PTI_News/status/1861960471689265638
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ