Breaking News

9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 12ம் வகுப்பு வரை ரூ.1,000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் முழு விபரம்

அட்மின் மீடியா
0

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ரூ.4,000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் முழு விபரம்

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊரகத் திறனாய்வுத் தேர்வு  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.11.2024

ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிச.14-ல் நடைபெறவுள்ளது. 

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5/- சேவைக் கட்டணம் ரூ.5/- என மொத்தமாக ரூ.10/-னை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் விண்ணப்பிக்கலாம். 

மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவ மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இத்தொகை வழங்கப்படும். 

Tags: கல்வி செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback