Breaking News

AC யில் இருந்து வெளியேறும் நீரை தீர்த்தம் என போட்டி போட்டு குடித்த பக்தர்கள் வைரல் வீடியோ drink AC water mistaken for 'Charan Amrit'

அட்மின் மீடியா
0

AC யில் இருந்து வெளியேறும் நீரை தீர்த்தம் என போட்டி போட்டு குடித்த பக்தர்கள் வைரல் வீடியோ Devotees drink AC water mistaken for 'Charan Amrit' at Banke Bihari temple, Vrindavan

உத்தரபிரதேசத்தில் உள்ள பிருந்தாவனம் பகுதியில் பங்கி பிஹாரி என்ற கிருஷ்ணர் கோயில் உள்ளது.இந்த கோயிலில் பக்தர்கள் கோவிலின் சுற்றுசுவரில் உள்ள யானை முகம் கொண்ட அமைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீரை பிடித்துக் குடித்தனர். ஒருவர் பின் ஒருவராக இதனை தொடர்ந்த நிலையில் அவ்வழியாக சென்ற கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் குடிப்பது தீர்த்தம் அல்ல ஏசி தண்ணீர் என்று விளக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் சிலர் கைகளில் பிடித்து குடிப்பதும், சிலர் பிளாஸ்டிக் கோப்பை போன்ற பொருளில் நிரப்பி குடிப்பதும், எதுவும் இல்லாதவர்கள் உள்ளங்கையில் நீரைப் பிடித்துக் குடிப்பதும் பதிவாகியிருக்கிறது. 

ஏசி தண்ணீரை குடிக்கலாமா:-

சியிலிருந்து வெளியேறும் தண்ணீரைக் குடிக்க கூடாது  கூலிங் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் உருவாகும் தண்ணீரில் பூஞ்சை உட்பட பல வகையான நோய்த்தொற்றுகளுக்கான கிருமிகள் இருக்கும். சில நேரங்களில் அது உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம். என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

Give Us Your Feedback