Breaking News

நான்வெஜ் சாப்பிட்டதால் பொது இடத்தில் அவமானப்படுத்திய காதலன் தற்கொலை செய்து கொண்ட இளம் விமானி air india pilot srishti tuli suicide

அட்மின் மீடியா
0

நான்வெஜ்  ( அசைவ உணவு ) சாப்பிட்டதால் பொது இடத்தில் அவமானப்படுத்திய காதலன் தற்கொலை செய்து கொண்ட இளம் விமானி  air india pilot srishti tuli suicide

 


 

நிகழ்ச்சி ஒன்றில் நான்வெஜ் ( அசைவ உணவு ) சாப்பிட்டதால் அனைவரின் முன்னிலையில் காதலன் தன்னை அவமானப்படுத்தி  விட்டதால் பெண் பைலட் சிருஷ்டி துலி (25) தற்கொலை!   

பெண்ணின் பெற்றோர் அளித்த  புகாரைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் ஆதித்யா பண்டிட் கைது.

 

Tragic Death of Gorakhpur Pilot Srishti Tuli in Mumbai, Boyfriend Held for AbetmentA 25-year-old Air India pilot, Srishti Tuli, was found dead in her Mumbai flat, having hanged herself with a data cable. Police have arrested her boyfriend, Aditya Pandit (27), on charges of abetment after Tuli's family members accused him of harassment.

The couple had been in a relationship since meeting during their commercial pilot training in Delhi. Tuli, originally from Gorakhpur, had been working in Mumbai since June 2023. 

Pandit was taken into custody after an FIR was filed, which also included allegations of forcing Tuli to stop eating non-vegetarian food.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் சிருஷ்டி துலி (25). கோரக்பூரின் முதல் பெண் விமானி இவர் ஆவார், இவர் பயிற்சியில் இருந்தபோது  சக விமானியான ஆதித்யா பண்டிட் (27) என்பருடன் நட்பு ஏற்பட்டு அதன் பின்பு காதலாக மாறியுள்ளது. பயிற்சிக்கு பின்பு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தவர் மும்பை அந்தேரியில் வாடகை வீட்டில் தனது காதலனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் குருகிராமில் இரவு உணவிற்கு ராஷி மற்றும் அவர்களது நண்பர்களுடன் சென்றுள்ளனர். அப்போது சிருஷ்டியும் மற்றவர்களும் அசைவ உணவை உட்கொள்ள வேண்டும் என கூறியபோது மற்றவர்கள் முன் ஆதித்யாவை கடுமையாக திட்டியுள்ளார். 

இந்த நிலையில், நேற்றைய தினம் பெண் விமானி சிரிஷ்டி, தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

போலீசார் சிருஷ்டி துலியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் காதலர் ஆதித்யா பண்டிட்(27) என்பவர் உடன் தங்கி இருந்துள்ளார். அவர் அடிக்கடி சிருஷ்டி துலியை பொது இடங்களில் வைத்து அசிங்கப்படுத்தியதும், அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறி அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனஉளைச்சல் அடைந்த சிருஷ்டி துலி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிருஷ்டி துலியை தற்கொலைக்கு தூண்டிய காதலன் ஆதித்யா பண்டிட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா பண்டிட் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback