Breaking News

நடிகர் தனுஷ் - ஐஷ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு! Aishwarya Rajinikanth and Dhanush divorce

அட்மின் மீடியா
0

நடிகர் தனுஷ் - ஐஷ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு!   

 

சேர்ந்து வாழமுடியாது என இருவரும் திட்டவட்டமாக கூறிய நிலையில், விவாகரத்து வழங்கப்பட்டது! 

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்களின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர், மேலும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தை அடுத்து இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் சேர்ந்து வாழமுடியாது என இருவரும் திட்டவட்டமாக கூறிய நிலையில், விவாகரத்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback