தனது பெற்றோரின் விவாகரத்து குறித்து இணையத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக A.R.ரகுமானின் மகன் A.R.அமீன் கருத்து
தனது பெற்றோரின் விவாகரத்து குறித்து இணையத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக A.R.ரகுமானின் மகன் A.R.அமீன் வேதனை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்தார். மேலும் இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டதால் ஏ.ஆர். ரகுமானை விட்டு பிரிவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் என் அப்பா ஒரு லெஜண்ட். தன் படைப்புகளால் மட்டுமல்ல... பண்பு, அன்பு, மரியாதை என அனைத்தினாலும் ஒரு லெஜண்ட்டாக இருக்கிறார். அவரைப்பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது. இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசுகையில், அதில் உண்மையும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து ஊக்குவிக்காதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்