Breaking News

மருத்துவரை கத்தியால் குத்தும் அளவிற்க்கு கோவம் வந்தது ஏன் விக்னேஷ் தாயார் விளக்கம்

அட்மின் மீடியா
0

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை மருத்துவமனை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர்  கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை பிரேமாவின் மகனான விக்னேஷ் என்பவர் கிண்டி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு புற்றுநோய் பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியை தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பாலாஜி நிலை தடுமாறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.இதனை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில், விக்னேஷின் தாய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்,

என் மீது உள்ள பாசம் காரணமாக மருத்துவரை மகன் விக்னேஷ் தாக்கியுள்ளார். என் மகனுக்கும் இதய பிரச்சனை மற்றும் வலிப்பு நோய் இருக்கிறது. எனக்கு 5வது ஸ்டேஜ் கேன்சர் என புரளி கிளப்புகிறார்கள். அடையாறு மருத்துவமனையில் சோதித்தபோது, எனக்கு இரண்டாவது கட்டத்தில் தான் புற்றுநோய் இருக்கிறது என்றும், விரைவில் குணப்படுத்திவிடலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் இன்னிக்கு எனக்கு 5ஆவது ஸ்டேஜ் கேன்சர் என்கிறார்கள். 

ரிப்போர்ட்டை எல்லாம் அடையாறில் இருந்து வாங்கிக் கொண்டு ஜனவரி 14 ஆம் தேதி வருமாறு சொன்னார் .நானும் ரிப்போர்ட்களை வாங்கிக் கொண்டு போனேன். 14, 15, 16 ஆகிய தேதிகளில் எனக்கு 17 ஊசி போட்டார். ஒவ்வொரு கீமோவுக்கு நான் ஏதாவது கேட்டால், "நான் டாக்டரா, நீ டாக்டரா" என கேவலமாக பேசுவார். என்னை ஆங்கிலத்தில் திட்டுவார். 

டாக்டர் பாலாஜி எனக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூற மாட்டேன். எனது ரிப்போர்ட்களை வைத்து எனது உடம்புக்கு என்ன என கண்டுபிடித்து அதற்கேற்ப சிகிச்சை அளித்திருக்க வேண்டாமா? என்று தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback