வங்ககடலில் உருவாகிறது பெங்கல் புயல் எங்கு கரையை கடக்கும் எங்கு மழை பெய்யும் முழு விவரம்
வங்ககடலில் உருவாகிறது பெங்கல் புயல் எங்கு கரையை கடக்கும் எங்கு மழை பெய்யும் முழு விவரம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது.
இதன் காரணமாக, வருகின்ற 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
25-11-2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் இன்று உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறு எனவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக வலுப்பெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும் எனவும், சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்