சென்னை கிண்டியில் மருத்துவர் மீதான கத்திக்குத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு
சென்னை கிண்டியில் மருத்துவர் மீதான கத்திக்குத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தாக்குதலை அரசு தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேந்த செந்தில் பேட்டியளித்துள்ளார்.
இன்று கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் மீதான கொடூரமான தாக்குதலை அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டிக்கிறது.
குற்றவாளிகளை தண்டிக்க கோரி மருத்துவமனையில் அவசரகாலத்தைத் தவிர மற்ற சேவைகளை நிறுத்தி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்
கத்திக்குத்துக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி புகைப்படம் |
மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போரட்டம் அறிவித்துள்ளனர்.
நாளை காலை 8 மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பணி புறக்கணிப்பு நடத்துவது தொடர்பாக இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க கோரியும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
Tags: தமிழக செய்திகள்