இன்று இரவு அல்லது நாளை காலை தான் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் - வெதர்மேன் பிரதீப் ஜான்
இன்று இரவு அல்லது நாளை காலை தான் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் - பிரதீப் ஜான்
பெஞ்புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் KTCC பகுதியில் குறிப்பாக சென்னைக்கு மேலே அடர்த்தியான மேகங்கள் உள்ளன. அடுத்த 12 மணிநேரத்தில் KTCC பகுதியில் மேகங்கள் தொடர்வதால் இங்கு அதிக மழை பெய்யும்.மேலும், KTCC பகுதிகளுக்கு அதிகளவு மழைப்பொழிவு கொடுக்கும் காலம்தான் இது. இரவு முதல் காலை 8.30 மணி வரை கே.டி.சி.சியில் 60-120 மிமீ மழை பெய்துள்ளது.
அடுத்த 12 முதல் 18 மணிநேரம் இந்தப் பகுதிகளை கவனமாக கவனிக்க வேண்டும். சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே மரக்காணம் முதல் மாமல்லபுரம் வரையில் எங்காவது புயல் கரையை கடக்கும். எனினும் புயல் கரையை கடக்கும் நேரம் மட்டும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலும் இன்று இரவு முதல் டிசம்பர் 1 அதிகாலை இடையில் புயல் கரையை கடக்கலாம். புயல் கரையை கடக்கும் வரை KTCC பகுதியில் மழை பெய்யும். இன்று மாலையில் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கிமீ வரை வீசக்கூடும்
பெஞ்சல் புயல் தற்போது எங்கு உள்ளது? எங்கு கரையை கடக்கும் சாட்டிலைட் VIEW பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-
https://www.adminmedia.in/2024/11/view-windy-live-weather.html
Tags: தமிழக செய்திகள்