சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்
சட்டத்தின் விதிமுறைகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல. குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவாராக இருத்தல் வேண்டும்.
(அல்லது) குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்படிவத்தை விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாவட்ட அல்லது துறை சார்ந்த இணையத்தள முகவரியிலிருந்து www.virudhunagar.nic.in https://dsdcpimms.tn.gov.in விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் அல்லது செய்துகொள்ளலாம்.
தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 06.12.2024 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். இயக்குநர். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை. எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600 010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
Applications are invited by the District Child Protection, Virudhunagar for Chairperson and Members of the Child Welfare Committee
DEPARTMENT OF CHILDREN WELFARE AND SPECIAL SERVICES District Collector Press Release Appointment of Chairperson and Members of the Child Welfare Committee, Virudhunagar District.
Applications are invited by the Director of Children welfare and special Services from the eligible candidates who possesses the following qualifications for appointment of Chairperson and Members in Child Welfare Committee, Virudhunagar District under the provisions of Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015. Chairperson and Members for Child Welfare Committee will he appointed by Government on a honorarium basis of which one shall be a woman and the position is not a government employment.
The applicants should have a degree in Child psychology or psychiatry or law or social work or sociology or human health or education or human development or special education for differently abled children and has been actively involved in health, education or welfare activities pertaining to children for seven years or is a practicing professional with a degree in child psychology or psychiatry or law or social work or sociology or human health or education or human development or special education for differently abled children.
The age of the applicant should not be less than 35 years and not completed 65 years on the date of notification. No person shall be appointed for a period of more than three years as a member of Committee. The application format and eligibility criteria may be obtained from the District Child Protection Unit, Virudhunagar or applicant can visit district and departmental website www.virudhunagar.nic.in or https://dsdcpimms.tn.gov.in. Filled in applications should be sent to the following address on or before 5.00 P.M 06.12.2024 (Friday). Separate applications shall be sent by the applicant for applying Chairperson and Members.
The Director,
Directorate of Children Welfare and Special Services,
No.300, Purasaiwalkam High Road,
Kellys,
Chennai 600 010.
The filled in applications should reach the above office within stipulated date. The appointment will be purely based on merit and experience. The decision of the Government will be final in this regard.
https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/11/2024112127-2.pdf
https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/11/2024112242.pdf
Tags: வேலைவாய்ப்பு