பிகாரில் ரயில் என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் போது உடல் நசுங்கி பலியான ரயில்வே ஊழியர் வைரல் வீடியோ
பீகார் மாநிலம் ராவனி ரயிலின் நிலையத்தில் ரயில் பெட்டியில் இணைப்பை திறக்கும் பணியின் போது ரயில் எதிர்பாராதவிதமாக பின்னோக்கிச் சென்றதால், அமர் குமார் ராவ் என்ற ஊழியர் உடல் நசுங்கி பலி இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை
பீகாரில் உள்ள பரவுனி ரயில் நிலையத்தில் இரு ரயில்களுக்கு இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் ஈடுபட்டார் அப்போது லோகோ பைலட் இன்ஜினை முன்னோக்கி செலுத்தாமல் பின்னோக்கி திருப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரயில் ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
அருகில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு லோகோ பைலட் கீழே இறங்கி ஓடியதாகவும், இன்ஜினை மாற்றவோ, விபத்தை தடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1855439785122492782
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ