Breaking News

ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் அறிவிப்பு

 


ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌ தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌

உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம் என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். 

அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என பேசினார்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிடமாடல் அரசின் இலக்காகும்.மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்  என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback