Breaking News

சாப்பாடு வடிக்கும் போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் இளம்பெண் பலி

அட்மின் மீடியா
0

சாப்பாடு வடிக்கும் போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் இளம்பெண் பலி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிதாஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார் இவருடைய  மகள் நந்தினி  (வயது 16 ) கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். 

ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும்போது, எதிர்பாராதவிதமாக கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடலில் கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து நந்தினி அவரை பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback